இயக்கச் செய்திகள்

திருப்பூர் நிகழ்வு

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற
திருப்பூர் வடக்கு மாநகரம்
மாதாந்திர அமர்வுக்கூட்டம் 9-07-23 மாலை 5.00 மணிக்கு
தோழர்; எஸ்.சண்முகம் தலைமையில் திருப்பூர் கே ஆர்வி லேவுட்,திருவிக நகர் மனவளக்கலை மன்றத்தில் துவங்கி நடைபெற்றது.

வரவேற்புரையை ஆசிரியர் மேரி நிர்மலா நிகழ்த்தினார்.
மாதாந்திர வேலை அறிக்கை திருப்பூரில் ஜுன் 17, 18 தேதிகளில் நடைபெற்ற தகஇபெ மன்ற மாநில செயற்குழு, மாநிலக் குழு, தகஇபெ மன்றம்,NCBH இணைந்து நடத்திய சிறந்த படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் விழாவின் சிறப்பு குறித்து செயலாளர் எஸ்.ஏ.காதர் துவக்க உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்.

தகஇபெ மன்றம் மாநிலக் குழு வின் முடிவுகளையும், நிகழ்ச்சியின் சிறப்பு குறித்தும், மாநிலக் குழுவால் திருப்பூர் வடக்கு மாநகரக்கிளையின் தோழர் த.சசிகலா அவர்களை மாநில துணைச்செயலாளராக
தேர்வு செய்யப்பட்டதை
வரவேற்றும் அவருக்கு சிறப்புச் செய்யப்பட்டு
மாவட்டத் தலைவர் தோழர் பி.ஆர்.நடராசன் அவர்கள் வாழ்த்திப்பேசினார்.

நாவலாசிரியர் தோழர் த.சசிகலா அவர்கள் எழுதிய “வல்லமை தாராயோ” என்ற நூலை தோழர் P.R.நடராசன் அறிமுகம் செய்து வைக்க, தோழர்கள் அருணாசலம் ExMC வட்டாச்சியர் எல்.அருணா
தோழர் பாரதி சுப்பராயன்,
தோழர் எஸ்.ஏ.காதர்
நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

கோவை முன்னால் துணைஆட்சியர், தோழர் வெ.சுப்பிரமணியம் எழுதிய ‘அரசாட்சியில் மனசாட்சி’,என்ற நூலை,திருப்பூர் வட்டாச்சியர் திருமிகு எல்.அருணா அவர்கள் சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார்.

தோழர் பாரதிசுப்பராயன்
மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில்
கடவுள் யார்? என்ற விளக்கத்தையும்
இடதுசாரி,வலதுசாரி என்றால் என்ன என்ற விளக்கத்தையும் எளிய முறையில் புரியும்படி எடுத்து விளக்கிப்பேசினார்.

நாவலாசிரியர் சோ.தருமன் எழுதிய சாகித்திய அகடாமி விருது பெற்ற ‘சூல்’ நாவல் குறித்து தனது வாசிப்பு அனுபவத்தை
சிறந்த ஒரு கதை சொல்லி போல் நாவலை சுருக்கமாக தொய்வின்றி சிறப்பான முறையில்
முனைவர் மு.மேரிரோஸ்லின் அவர்கள் வழங்கினார்.

இன்றைய நாட்டு நடப்பு குறித்து நறுக்குத் தரித்தாற்போல் நல்ல தொரு எழுச்சிக் கவிதையை தோழர் அபுதாஹீர் நூராணி வழங்கினார்.

மூலிகையின் மகத்துவம் குறித்து நல்லதொரு கவிதையை தோழர் சுசீலாராமமூர்த்தி வாசித்தார்.

ஐம்பது கவிஞர்கள் எழுதும் நூறு கவிதைகளின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும்
இதன் தொகுப்பாசிரியர்களாக
கவிஞர் அபுதாஹிர் நூராணி,
முனைவர் மேரிரோஸ்லின்
ஆசிரியர் அ.பழனி இருப்பார்கள்.

நிகழ்ச்சியை ஆசிரியர்
அ.பழனி அவர்கள் தொகுத்து வழங்க…
தோழர்;இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version