இயக்கச் செய்திகள்

வேதாரண்யம் நிகழ்வு

Published

on

வேதாரண்யத்தில் வாங்க பேசலாம் கலை இலக்கிய அமர்வு:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கலை இலைக்கியப் பெருமன்றம் சார்பில் நடத்தப்படும் வாங்க பேசலாம் பாடலாம்… மாதாந்திர தொடர் நிகழ்ச்சி சனிக்கிழமை (08.07.2023)மாலை தொடங்கி நடைபெற்றது.

தமிழ்த்தென்றல் வளாகத்தில் நடைபெற்ற அந்த மாத அமர்வுக்கு தலைப்பு ஏதும் சொல்லாமல் வாங்க பேசலாம் … பாடலாம் என்றே குறிப்பிட்டிருந்தோம்.

தலைப்பு போடாததால் விளைந்த பலன் என்ன தெரியுமா?.அமர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே முழுமையாக உணரமுடியும்.அப்படியொரு அமர்வு.

அப்பா கைய புடிச்சி நடந்தா… எப்படி இருக்கும்.அதை தனது இனிய குரலில் வடித்தார் அண்டர்காடு சுந்தேரேச விலாஸ் பள்ளியில் நான்காவது படிக்கும் நி.மதன்.

பூவூல வாசமில்ல… பொண்ணு மனசில நேசமில்ல…- என்ற பாடலை 60 -வயதை கடந்த தேத்தாக்குடி காசிநாதன் புதிய வரவாக நின்று பாடி அசத்தினார்.

இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் கவிதையை அண்ணாப்பேட்டை கவிஞர் செளமியாவும், பெண்ணிய பாகுபாட்டினை வெளிக்கொணரும் கவிதையை தேத்தாக்குடி அரசுப் பள்ளி மாணவி சுதாவும் வடித்தனர்.

நிகழ்வில்,10 ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட நிலையில் முதலிடத்தையும்,அரசுப் பள்ளிகள் அளவில் மாநில நிலையில் 2-வது சிறப்பிடத்தையும் பெற்றுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளி மாணவி அ.லெட்சுதா பாராட்டப்பட்டார்.

கலையின் வழியே கற்ற அந்த மாணவியும் அன்புள்ளம் கொண்ட அம்மாவுமாவுக்கு…பாடலை பாடி அசத்தினார்.

எதை பேசுவதென்று தலைப்பே இல்லாத நிலையில், அரங்கில் பதிவான கருத்துகள்தான் வியக்கச்செய்தது.குடிநீரில் மலத்தைக் கழிப்பதும்,மனிதன் மீது சிறுநீர் கழிப்பதும் பண்பாட்டு சீரழிவின் உச்சம் என்பதை பலரும் பேசினர்.

மனித நாகரிகம் தோன்றிய நதிக்கரையின் இன்றைய நிலை…, தக்காளி விலை…,சினிமாவின் தாக்கம்,வளர்ச்சி, ஏமாற்றம்… இப்படி பல விடயங்களை பலரும் பேசினர்.

பாலின நிகர்நிலையில் தொடரும் சமூக அவலங்களை ஆர்வலர் வசந்தி செல்வகுமார் விவரித்தார்.நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பதிவிட்ட அவர்,பல வேலைகளுக்கு மத்தியில் மணிக்கனக்கில் அமர்வில் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த அமர்வில் கிடைத்திட்ட பதிவுகள் தனக்கு 2 மாதத்துக்கான புதிய சக்தியை கொடுப்பதாகக் கூறியபோது கரங்கள் ஒலித்தது.உண்மையில் பெருமன்றத்துக்கு கிடைத்திருக்கும் இந்த மனிதியின் வரவு மகிழ்ச்சி தருகிறது.

இப்படியாகவே இந்த அமர்வில் பலரின் பேச்சு நல்ல, தைரியமான பதிவுகளாக அமைந்தது.

வாட்சாப்பில் மட்டுமே பகிரப்பட்ட தகவலை ஏற்று வழக்கம்போல ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், கவிஞர்கள் படைப்பாளிகள் என நிகழ்வில் பங்கேற்ற ஆர்வலர்களின் முகங்கள் புதிய நம்பிக்கையை தந்தது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி, இந்த முறை தகவல் பகிர்ந்ததில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் களையப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலான எண்ணிக்கை வந்திருக்கும். இந்த நிலையிலும் வருகை தந்தவர்களுக்கும் ,இடம் அளித்து, தேநீர் கொடுத்து வாய்ப்பளித்த கவிஞர் புயல், வடை கொடுத்த வை.ப.சாரதி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்போம்.

மேலும், பத்திரிக்கைகளுக்கான செய்தியையும் இத்துடன் இணைக்கிறேன்.

வேதாரண்யம், ஜூலை 9:

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய அமர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேதாரண்யம் தமிழ்த்தென்றல் வளாகத்தில் வாங்க பேசுவோம்,பாடுவோம் என்ற அமர்வாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத்தின் கிளைத் தலைவர் இள.தொல்காப்பியன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் புயல் சு.குமார்,மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,
கிளைச் செயலாளர் தங்க.குழந்தைவேலு,பொருளாளர் சு.பாலாஜி,ஆய்வு மாணவி த.சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்,நான்காம் வகுப்பு மாணவன் மதன்,தேத்தாக்குடி என்.காசிராஜன், சர்வகட்டளை லெட்சுதா ஆகியோர் மண்ணின்பாடல்களை பாடினர்.கவிஞர்கள் செளமியா,சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண் எடுத்து மாவட்ட நிலையல் முதலிடமும் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளி மாணவி அ.லெட்சுதா உள்பட இளம் படைப்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.

நிகழச்சியில்,ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மு.ராஜசேகரன்,அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி,பேராசிரியர் ப.பிரபாகரன்,வழக்குரைஞர் ராமஜெயம்,ஆசிரியர்கள் முத்தரசு,சு.பாஸ்கரன்,ஜெய.கந்தசாமி,செந்தில்நாதன், அமிர்தலிங்கம்,எழிலரசன்,சமூக ஆர்வலர் வசந்திசெல்வகுமார், நல்லாசிரியர்கள் வீ.வைரக்கண்ணு,எஸ்.செல்வராசு,கவிஞர்கள் ஈஸ்வரமைந்தன், லெ.பக்கிரிசாமி, இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version