Connect with us

இயக்கச் செய்திகள்

கோவில்பட்டி நிகழ்வு

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் கவிஞர் கண்ணன் செல்லிமுத்து அவர்களினுடைய கவிதை நூல் வெளியீடு நிகழ்வு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமையாக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினுடைய கோவில்பட்டி கிளை தலைவர் கலைமாமணி அமல புஷ்பம் தலைமை வகித்தார்.

முன்னிலையாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய நகர தலைவர் கே .பி ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

தலைமையுரையாக தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தினுடைய மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜி சத்தியபாலன் மற்றும் வாழ்த்துரையாக கவிஞர் சிவானந்தம் மகிழ்வோர் மன்றம் ஆசிரியர் செல்வின் வழங்கினர்.

தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தினுடைய கிளை பொருளாளர் மாரிமுத்து மற்றும் கிடாவெட்டு கதை ஆசிரியர் எழுத்தாளர் ராஜேஷ் ராதாகிருஷ்ணன் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் கவிஞர் கண்ணன் செல்லி முத்துவின் கவிதை நூலை வெளியிட்டு செம்மலர் ஆசிரியர் தோழர் ச.தமிழ்செல்வன், முதல்பிரதியை த.க.இ.பெ மாநில துணைத்தலைவரும் கவிஞருமான கண்மணி ராசா பெற்றுக்கொண்டார்.

பின்னர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள் இந்நிகழ்வில் கோவில்பட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினுடைய கிளை உறுப்பினர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் அதிகமான பேர் பங்கேற்றனர்.

நிகழ்வை கோவில்பட்டியினுடைய கிளை துணை தலைவர் ஆர் ஜே மணிகண்டன் ஒருங்கிணைத்தார். இறுதியில் கிளைச் செயலாளர் முத்துராமன் அவர்கள் நன்றி கூறினார்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இயக்கச் செய்திகள்

திருப்பூர் நிகழ்வு

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற
திருப்பூர் வடக்கு மாநகரம்
மாதாந்திர அமர்வுக்கூட்டம் 9-07-23 மாலை 5.00 மணிக்கு
தோழர்; எஸ்.சண்முகம் தலைமையில் திருப்பூர் கே ஆர்வி லேவுட்,திருவிக நகர் மனவளக்கலை மன்றத்தில் துவங்கி நடைபெற்றது.

வரவேற்புரையை ஆசிரியர் மேரி நிர்மலா நிகழ்த்தினார்.
மாதாந்திர வேலை அறிக்கை திருப்பூரில் ஜுன் 17, 18 தேதிகளில் நடைபெற்ற தகஇபெ மன்ற மாநில செயற்குழு, மாநிலக் குழு, தகஇபெ மன்றம்,NCBH இணைந்து நடத்திய சிறந்த படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் விழாவின் சிறப்பு குறித்து செயலாளர் எஸ்.ஏ.காதர் துவக்க உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்.

தகஇபெ மன்றம் மாநிலக் குழு வின் முடிவுகளையும், நிகழ்ச்சியின் சிறப்பு குறித்தும், மாநிலக் குழுவால் திருப்பூர் வடக்கு மாநகரக்கிளையின் தோழர் த.சசிகலா அவர்களை மாநில துணைச்செயலாளராக
தேர்வு செய்யப்பட்டதை
வரவேற்றும் அவருக்கு சிறப்புச் செய்யப்பட்டு
மாவட்டத் தலைவர் தோழர் பி.ஆர்.நடராசன் அவர்கள் வாழ்த்திப்பேசினார்.

நாவலாசிரியர் தோழர் த.சசிகலா அவர்கள் எழுதிய “வல்லமை தாராயோ” என்ற நூலை தோழர் P.R.நடராசன் அறிமுகம் செய்து வைக்க, தோழர்கள் அருணாசலம் ExMC வட்டாச்சியர் எல்.அருணா
தோழர் பாரதி சுப்பராயன்,
தோழர் எஸ்.ஏ.காதர்
நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

கோவை முன்னால் துணைஆட்சியர், தோழர் வெ.சுப்பிரமணியம் எழுதிய ‘அரசாட்சியில் மனசாட்சி’,என்ற நூலை,திருப்பூர் வட்டாச்சியர் திருமிகு எல்.அருணா அவர்கள் சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார்.

தோழர் பாரதிசுப்பராயன்
மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில்
கடவுள் யார்? என்ற விளக்கத்தையும்
இடதுசாரி,வலதுசாரி என்றால் என்ன என்ற விளக்கத்தையும் எளிய முறையில் புரியும்படி எடுத்து விளக்கிப்பேசினார்.

நாவலாசிரியர் சோ.தருமன் எழுதிய சாகித்திய அகடாமி விருது பெற்ற ‘சூல்’ நாவல் குறித்து தனது வாசிப்பு அனுபவத்தை
சிறந்த ஒரு கதை சொல்லி போல் நாவலை சுருக்கமாக தொய்வின்றி சிறப்பான முறையில்
முனைவர் மு.மேரிரோஸ்லின் அவர்கள் வழங்கினார்.

இன்றைய நாட்டு நடப்பு குறித்து நறுக்குத் தரித்தாற்போல் நல்ல தொரு எழுச்சிக் கவிதையை தோழர் அபுதாஹீர் நூராணி வழங்கினார்.

மூலிகையின் மகத்துவம் குறித்து நல்லதொரு கவிதையை தோழர் சுசீலாராமமூர்த்தி வாசித்தார்.

ஐம்பது கவிஞர்கள் எழுதும் நூறு கவிதைகளின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும்
இதன் தொகுப்பாசிரியர்களாக
கவிஞர் அபுதாஹிர் நூராணி,
முனைவர் மேரிரோஸ்லின்
ஆசிரியர் அ.பழனி இருப்பார்கள்.

நிகழ்ச்சியை ஆசிரியர்
அ.பழனி அவர்கள் தொகுத்து வழங்க…
தோழர்;இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Continue Reading

இயக்கச் செய்திகள்

மாவட்டக் குழுக் கூட்டம் விருதுநகர்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஒரிஸா ரயில் விபத்து மற்றும் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானம் செய்யப்பட்டது.

தோழர் பயணம் சுந்தரராஜன் வரவேறப்புரை வ்ழங்கினார்.

தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கிளை செயல்பாடுகள் குறித்து கிளைச் செயலாளர்கள் சாத்தூர் தோழர் கணேசன், விருதுநகர் தோழர் செண்பகராஜன் ,சிவகாசி தோழர் முத்து, இராஜபாளையம் தோழர் நித்தியா, பேசினார்கள்.

இராசபாளையம் பயிற்சி முகாம் மற்றும் சாத்தூர் சிறுகதை பயிற்சிப் பட்டறை குறித்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் பேசினார்.

மாநிலத் துணைத் தலைவர் தோழர் கண்மணி ராசா திருப்பூர் செயற்குழு, மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.

இராசபாளையம் விவசாயத் தொழிலாளர் மாநாடு குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் .த.அறம் பேசினார்.

நிறைவாக விருதுநகர் மாவட்டச் செயலாளர் நீதகிருஷ்ணன் நன்றி கூறினார்

Continue Reading

இயக்கச் செய்திகள்

விருதுநகர் கிளைக் கூட்டம்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – விருதுநகர் கிளைக் கூட்டம் 9.7.2023 ஞாயிறு மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பயணம் சுரா வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர். த. அறம் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நீல நிலா குட்டி எழுத்தாளர்கள் சிறப்பிதழை பொ.லிங்கம் அவர்கள் வெளியிட விருதுநகர் மாவட்டப் பொருளாளர் நித்யா பெற்றுக் கொண்டார். விருதுநகர் கிளை உறுப்பினர் மங்கையர்க்கரசியின் புதல்வர் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டப்பட்டார்.

இசையரங்கில் பாடகர்கள் இராம் போ குமார், கணேசன் , கலிங்கல் சுவாமிநாதன், நாகா மற்றும் பாடகிகள் காயத்ரி, ஜெயா பாடல்களைப் பாடினார்கள். கருத்தரங்கில் மங்கையர்கரசி மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கருத்துரை வழங்கினார்.

படைப்பரங்கில் நீலநிலா செண்பகராஜன், பயணம் சுரா, பொம்மை நாகராஜன் , தீனதயாளு கவிதை வாசித்தார்கள். பொ.நா.கமலா கட்டுரை வாசித்தார். நிறைவாக விருதுநகர் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் நன்றி கூறினார்

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.