Connect with us

கவிதைகள்

எஞ்சாமி

Published

on

ஒரு கோடாங்கியும்

குவார்ட்டரும் போதும்

கொஞ்சநேரத்தில்

கூட்டி வந்துவிடுவார்- தாத்தா

எந்தச் சாமியையும்…


வெள்ளி செவ்வாயென்றால்வெறும்

பத்தி வாசம் போதும்

வீட்டு வாசலுக்கே வரவழைப்பாள்- அம்மா

எல்லா அம்மனையும். 


அப்புறமாய் தொடங்கும்

எங்கள் வழக்கு


கல்யாணமான பெண்ணுக்கு

 பிள்ளைவரம் கேட்டழுவோம்

நாங்கள் கோழியோடு

கொடையை 

முடித்ததைச் சொல்லி

குறைபட்டு கசியும் சாமி


சீக்காய் கிடக்கும்

சித்தியைக் காட்டி

சினந்து கொள்வோம் நாங்கள்

நாக்கை துருத்தி நானிருக்கேனெனும் சாமி. 


இப்படித்தான் 

இறக்கி வைத்தோம்

எம் துயரையெல்லாம்…

 பின்வல்லயக் கம்பின்

சலங்கைகள்

குலுங்கவனங்களுக்கு

திரும்பும் எஞ்சாமிகள். 

உனக்குத்தான்சொல்கிறேன்

எம் சாமிக்கு புரியும்எம் மொழி.

– கண்மணி ராசா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இலக்கியம்

கம்பன் பாடாத வரிகள்

கனல்கவி
கவிஞர் பொன்.இளையகுமார்

Published

on

Protest,Fist, Hand,Revolution,

கனல்கவி
கவிஞர் பொன்.இளையகுமார்

புல்வெளியில் போர்வைகள்
ஏதும் இன்றியே
படுத்துறங்கும் வெண்பனிகளை
துயில்லெழுப்ப மறந்ததோ ! (கம்பா)

நண்டூறும் வயலில்
பெண்டூறக் கண்டும்
விளையும் பயிருக்கு
உரமாகும் வியர்வைகளையா ? (கம்பா)

நெடுநெல் போனது
குறுநெல் வாழ்வை
குறைத்திடும் குறிப்பறிதலை
உரைத்திடடக் கூடலையோ ! (கம்பா)

கொஞ்சும் இயற்கைகைக்கு
கொஞ்சம் இடமில்லை
நஞ்சாகும் பூமியிலே
மிஞ்சுமோ கானிகளும் ? (கம்பா)

தீராவறுமைத் தெண்பட்டது
உண்டா கம்பா ?
வம்பில்லை நம்பு
பொதுவுடமை சொல்லு ! (கம்பா)

அறம்சாட வாழ்வியலில்
குறளோடு நில்லு ,
வளைந்தாலும் அரசியலை
அடியோடுக் கொல்லு ! (கம்பா)

மலர்களில் ஊடே
மகரந்தத்தில் தேனூரும்
இன்பம் தீண்டல்
தீர்க்கும் என்றாயே ! (கம்பா)

அந்திச் சுடும்
பிரிவின் வலி
ஆற்றாக் கடையாய்
ஊடல் தீர்க்குமோ ?(கம்பா)

அடுக்கடுக்காய் பொய்
சொன்னாயே கம்பா
அதிலாவது சேர்த்திருக்கலாமே
சாதிகள் பொய்யென்று ! (கம்பா)

யுத்தத்தைத் தவிர்த்து
மொத்தத்தைச் சொல்வேன்
கம்பன் பாடாத
வரி(லி)களை பாடவருகின்றேன் !

புரட்சி ஓங்குக…..

Continue Reading

இலக்கியம்

மனிதம் போற்றுவோம்.

முத்துராக்கு கவிதைகள்

Published

on

முத்துராக்கு


மனிதம் போற்றுவோம்.
####################
மண்ணில் பிறந்த மக்கள் சமமே/
மடமைத் தனமே மனிதரில் சாதிகள்/
விண்ணில் இருந்து பிறந்தவர் எவரோ/
வேற்றுமை எதற்கு விரும்புவோம் மக்களை/
கண்ணில் தூசெனில் கண்ணீர் கலங்கும்/
கருத்தில் பிழையெனில் கடமை தவறும்/
எண்ணிடக் குறைகள் எளிதாய் விளங்கும்/
என்றும் ஒற்றுமை ஏற்றம் கொடுக்கும்.

பெண்ணும் ஆணும் பிறப்பால் சரிநிகர்/
பேதம் பார்த்தால் பெருந்துயர் சேரும்.
உண்ணும் உணவு உடுக்க உடையுடன்/
உறங்க வீடும் உரிமை ஆகுமே/
திண்ணம் உயர்வு திறனுடன் கற்றிடத்/
தேசம் படிப்பை இலவசம் ஆக்குக/
வண்ணம் பலவாய் பூக்கள் இருந்தும்/
வற்றா மணமே வாகாய் ஈர்க்கும்.
பொ.முத்துராக்கு.03.07.2023.

Continue Reading

கவிதைகள்

ஜனகனமன

Published

on

அத்தனை வண்ணங்களிலும் கொடிகள் பறக்கின்றன
தேசம் விற்கப்பட்டுவிட்டது

இப்போது அந்த விழா
ஒரு பழக்கம் அவ்வளவுதான்

சில பாடல்கள் ஒலிப்பதாலோ
சில கொடிகள் பறப்பதாலோ
சிலர் பதக்கங்கள் பெறுவதாலோ
சிலர் உரைகள் நிகழ்த்துவதாலோ
அது
அந்தநாள் ஆகிவிடாது

மின்கம்பி வேலிகளில் அடிபட்டுச் சாகும்
யானைகள்
காடிழந்த கதையைப் பிளிறுகின்றன மரணத்தறுவாயில்
அதை
நாடிழந்த மனிதர்கள் கேட்கிறார்கள்
கூடிழந்த பறவைகளின் கூக்குரல் போல் ஒலிக்கிறது அது

வீடிழந்த மனிதர்களின் முன்
பிளிறும் பொக்லின்கள்
மதங்கொண்ட யானையைப்போல்
குடிசைகளைப் பிய்த்தெறியும்போது

எங்கே சுதந்திரம்?
யாருக்கு?

கோ.கலியமூர்த்தி

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.