Connect with us

நாட்டுப்புறக்கலைகள்

ஒயிலாட்டம்

Published

on

ஒயிலாட்டம் என்பது ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டம். தற்போது பெண்களும் ஆடுகின்றனர். கோவில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆட்டக்காரர்கள் சீருடை அணிந்து, காலில் சலங்கை கட்டிக் கொண்டு, வலது கையில் கைக்குட்டையுடன் ஆடுவர். பாளைத் தாளம், தவில், சிங்கி, டோலக் போன்றவை இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பாடப்படும் பாட்டின் இசைக்கேற்ப அடவுகளோடு இக்கலை நிகழ்த்தப்படும். பல கதைப் பாடல்களைப் பாடி ஒயிலாட்டம் நிகழ்த்துகின்றனர். அடவுகளின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் எனப் பகுக்கின்றனர். தமிழக நாட்டார் கலைகளுள் குறிப்பிடத்தகுந்ததாக விளங்கும் ஒயிலாட்டம் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. அரசியல் பரப்புரைகளுக்கும் ஒயிலாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

கரகாட்டம்

Published

on

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளையாலான குடத்தைத் தலையில், வைத்துக் கொண்டு, மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம் இது. கும்பாட்டம் என்றும் இதனைக் குறிப்பிடுவர். பெரும்பாலும் நாட்டார் தெய்வ விழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படும். இக்கலை தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்பட்டாலும், தஞ்சை, திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெருமளவு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே இக்கலையை நிகழ்த்துகின்றனர். பொதுவாக நையாண்டி மேளக்காரர்கள் நிற்கின்ற உட்பரப்பு இடமே கரகாட்டக்கலைஞர்கள் ஆடும் ஆடுகளமாக இருக்கும், மரபுவழிக் கரகாட்டத்தில் நாடகப் பாணியைக் காண முடியும். தெம்மாங்குப் பாட்டிற்காக ஆடப்படும் ஆட்டத்தையும் மரபு வழி ஆட்டத்தினுள் அடக்குவர். இன்றைய காலகட்டத்தில் கரகாட்டத்துடன் சாகசக் கலையும் இணைந்துள்ளது.

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.