Connect with us

வைரவிழா நிகழ்ச்சிகள்

வைர விழா போட்டி

Published

on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வைரவிழா நிகழ்ச்சிகள்

வைர விழா- மாணவர் போட்டிகள்- அறிவிப்பு-2

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு வைர விழாவையொட்டி ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டு ஏற்கெனவே மூன்று வகையான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இரண்டாம் தொகுப்பாக தற்போது மேலும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி

இதில், வரும் செப். 11ஆம் தேதி மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிறைவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும், பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஜூம் செயலி வழியில் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிக்கு மாணவர்கள் மகாகவி பாரதியின் ஏதாவதொரு பாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம். 3 நிமிடங்களுக்குள் ஒப்புவித்தல் வேண்டும். 4, 5 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும் 6,7,8,9 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும் பரிசுகள் வழங்கப்படும். முன்பதிவுக்கான கடைசித் தேதி: செப்டம்பர் 8.

முன்பதிவு செய்ய பள்ளி அடையாள அட்டையை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்க வேண்டிய எண்: 95789 78925 (நான்சி கோமகன்- சிறார் குழு- தகஇபெ). போட்டி நடைபெறும் நாள்: செப். 11, சனிக்கிழமை காலை 10 மணி முதல்

கவிதைப் போட்டி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. தலைப்பு: புதியன விரும்பி- பாரதி! கவிதைகளை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: டாக்டர் த. அறம், மாவட்டத் தலைவர், தகஇபெ, தனுஷ்கோடி மருத்துவமனை, 63, பழைய படந்தால் சாலை, சாத்தூர்- 626203. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: செப். 10, தொடர்புக்கு: வ. நவநீதகிருஷ்ணன் 94874 21826

வரும் செப். 17 ஆம் தேதி தந்தைப் பெரியார் பிறந்த நாளையொட்டி கட்டுரைப் போட்டி. தலைப்பு: அன்புள்ள எம் தந்தையே… (தந்தைப் பெரியாருக்கு மாணவர் எழுதும் கடிதம்), பள்ளி அளவில் 10,11,12 ஆகிய வகுப்பினரும், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கண்மணி ராசா, மாநிலச் செயலர், தகஇபெ.,4, பெரிய சுரைக்காய், பட்டித் தெரு, இராசபாளையம்-

  1. தொடர்புக்கு- 89035 43802 (வாட்ஸ்ஆப் மட்டும்). அனுப்ப வேண்டிய கடைசித் தேதி- செப். 16

வரும் செப். 28-ஆம் தேதி விடுதலைப் போராட்டத் தியாகி மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி. தலைப்பு: விடுதலைப் போரில் பகத்சிங். அனுப்பி வைக்க வேண்டிய கடைசித் தேதி- செப். 26. அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மௌ. குணசேகரன், 2, கருவலூரான் வீதி, கண்ணம்பாளையம், சூலூர் வட்டம், கோவை- 641402. தொடர்புக்கு- 81224 99492

பக்க அளவு- கட்டுரைகள் கையெழுத்தில் 10 பக்கம், தட்டச்சில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கவிதைகள் 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கவிதை, கட்டுரை ஆகிய படைப்புகளுடன் கல்லூரி/ பள்ளி மாணவர் என்பதற்கான சான்று ஏதாவதொன்றை இணைத்து – முழுமையான முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்

Continue Reading

வைரவிழா நிகழ்ச்சிகள்

வைர விழா போட்டி

Published

on

Continue Reading

வைரவிழா நிகழ்ச்சிகள்

வைர விழா போட்டி

Published

on

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.